சமயபுரம் கோவிலில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் – இந்து முன்னணி

0 327
Stalin trichy visit

இந்து முன்னணி மாநகர, மாவட்ட பேச்சாளர் மணிகண்டன், சமயபுரம் கோவில் இணை ஆணையருக்கு அளித்துள்ள மனுவில், சமயபுரம் கோவிலுக்கு கடந்த 22 ஆம் தேதி நேர்த்தி கடன் செலுத்த வந்த பக்தர் ஒருவர் கோவில் வளாகத்திலுள்ள கடை ஒன்றில் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். அந்த தண்ணிர் பாட்டில் உள்ளே இறந்த நிலையில் பல்லி இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பக்தர் இதுகுறித்து சமயபுரம் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். அதன்பின்னர் மீடியாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். எனவே தாங்கள் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவில் வளாகத்தில் தண்ணீர்பார்ட்டில் விற்பனை செய்தவரை சிசிடிவியில் பதிவுகள் மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும். இனி வரும் காலங்களில் கோவில் வளாகத்தில் தண்ணீர் பாட்டில் விற்க தடை விதிக்க வேண்டும். தண்ணீர் பாட்டில் விற்பனை செய்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் கோவில் வளாகத்தில் வரிசையில் நிற்கும் இடத்தின் அருகே குடிநீர் டேங்க் அமைக்க வேண்டுமென்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.