திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. கண்டன ஆர்ப்பாட்டம்

0 434
Stalin trichy visit

திருச்சி ரயில்வே பொன்மலையில்
எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி Srmu ரயில்வே தொழிற் சங்கத்தினர் கண்டன போராட்டம்.

திருச்சி பொன்மலை பணிமனை முன்பு எஸ்ஆர்எம்யு சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறையில் உள்ள நான சேஃப்டி காலிப் பணியிடங்களை சரண் செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்,
தென்னக ரயில்வேயில் உள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்களை படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமையில் வழங்க வேண்டும்,


மேலும், இந்திய ரயில்வே முழுவதிலும் சுமார் 2.4 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளது அதை உடனடியாக நிரப்பி பணியில் உள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.