திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..

0 410
Stalin trichy visit

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இன்று  திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ( Emergency COVID response package — ECRP Ward) ஒவ்வொரு படுக்கையும் தலா ரூபாய் 2.90 இலட்சம் மதிப்பில் என, மொத்தம் 32 படுக்கைகள் அமைத்துள்ளதைப் பார்வையிட்டு, மேலும் இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்து அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரிவில் 32 படுக்கைகளில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறுவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே. வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்.அருண் ராஜ் மற்றும் மருத்துவத்துறை , சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.