திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின்..
திருச்சிக்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை திருச்சி விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை எ.வ.வேலு, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ .கே .எஸ் .விஜயன், மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு, இ.ஆ.ப., மேயர் மு.அன்பழகன் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா , சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன் , செ.ஸ்டாலின் குமார், ந. தியாகராஜன்,எம். பழனியாண்டி, இனிக்கோ இருதயராஜ், சீ.கதிரவன், ப. அப்துல் சமது , துணை மேயர் ஜி. திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் வரவேற்றனர் .

திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின் கழக வெளியீட்டு
செயலாளர் திருச்சி செல்வேந்திரன் அவர்களை அவருடைய உறையூர் இல்லத்திற்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். அமைச்சர்கள்
கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி அலுவகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறார்.