பிரதமருடன் மாநில அமைச்சரான என்னை சமமாக பேசியது பெருமை அளிக்கிறது : அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
திருவெறும்பூர், ஜூன் : 9 – திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையில் பேசியதாவது., கடந்த 5 வருட அதிமுக அரசு சட்டமன்றம்போல இருக்க கூடாது என்பதற்காகவே திமுக அரசு கண்ணியமாக சட்டசபை நடந்து வருகிறது.
ஒருவர் என்னைப் பற்றி தெரியாமல் பேசியது வருத்தம். எப்படியோ பள்ளிக்குப் போய் வர்றதையாவது ஒத்துக் கொண்டாரே அதுவரைக்கும் மகிழ்ச்சி. தமிழக சட்டசபையில் நடப்பதை லைவ்வா அவர் பார்த்திருக்கலாம். சமத்துவம், தன்மானத்தைப் பற்றி பேசும் நெஞ்சுக்கு நீதி படம் பார்த்தது அவருக்குப் பிடிக்கவில்லையோ. டில்லியில் 100 நாட்களுக்கும் மேலாக நடந்த விவசாயிகளின் போராட்டத்தைச் சிறிதும் கண்டுகொள்ளாத தலைமையைக் கொண்ட அவர் அப்படி பேசியது வருத்தம்.
நாட்டின் பிரதமர் பதவியில் உள்ள மோடியோட மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான என்னையும் ஒற்றுமைப்படுத்தி சமமாக பேசியது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. எங்கள் நோக்கம் எங்கள் தமிழக மக்கள் நலனையும், தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றியும் தான்”” – என்று பேசினார்.
காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கிய நவீன வள்ளலார்
நான் முதல்வர் திட்டம், சமூக நீதி நாள் திட்டம்
கலைஞர் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து
மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை சமத்துவ நாளாக அறிவித்தது
தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்தது என பல்வேறு திட்டங்களை தந்த தலைவர் முதல்வர் அவர்களுக்கு நன்றி என உரையாற்றினார்