சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி – மாணவி படுகாயம்

0 1,075
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி சிறுகனூர் சாலையில் அதிவேகமாக வந்த நெடுஞ்சாலைத்துறை அரசு வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்தமாணவி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் 21 வயதான வினோத். சமயபுரம் அருகே உள்ள எம்ஏஎம் பொறியல் கல்லூரியில் எம்பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் எம்பிஏ இரண்டாமாண்டு படித்து வரும் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவி உமர் ஹசின்பானு. இவர்கள் இருவரும் இன்று மாலை புள்ளம்பாடியில் உள்ள கல்லூரி முடித்து இறந்தவரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத்தின் இருசக்கர வாகனத்தில் புள்ளம்பாடியை நோக்கி சிறுகனூர் தச்ச்சஞ்குறிச்சி சாலையில் வந்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த நெடுஞ்சாலை துறையின் அரசு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் வினோத் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த கல்லூரி மாணவி உமர் ஹசின் பானு தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் னூர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர் வினோத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.