ஜெகநாதபுரம் அம்மா உணவகத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

0 285
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் .3-  வார்டு எண் – 36 ஜெகநாதபுரம், மாரியம்மன் கோவில் தெருவில் , மாநகராட்சி ஆணையர் மரு.ர. வைத்திநாதன் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மக்கும் குப்பை , மக்காத குப்பைகள் என  தரம்பிரித்து வழங்குகின்றார்களா என்று  ஆய்வு செய்தார்.

இதில் அனைத்து தரப்பு பொதுமக்களும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் தெரிவித்தார்கள். மேலும், நாம் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும்  தெரிவித்தார்.

தொடர்ந்து ஜெகநாதபுரம் அம்மா உணவகத்தில் சுகாதாரம் குறித்து ஆணையர்  வைத்திநாதன் , அவர்கள் , துணை ஆணையருடன்  ஆய்வு செய்தார்

Leave A Reply

Your email address will not be published.