திருச்சியில் உள்ள வசந்த நகர், வ.உ.சி.நகர், காவேரி நகர், ஜேபி நகர், JRS நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் JRS நகரில் இன்று காலை 8 மணி அளவில் 75 வது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ராசரத்தினம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அக்பர் உசேன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் Deputy supdt. Engineer/PWD வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் யுனிடெக் வெல்ஃபேர் அசோசியேசன் உதவி செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் சிவசாமி, துணைச்செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி, ஜான் பிரகாஷ் எபிணேசன், முன்னாள் காவல்துறை உதவி ஆணையர் வீராசாமி, துணைத்தலைவர் பிரான்சிஸ் சேவியர், ஆடிட்டர் ஜோசப், முன்னாள் வனத்துறை ஆய்வாளர் புஷ்பராஜன், முன்னாள் விவசாயத் துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன், துணைச் செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் துணை தலைவர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.