திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது.

0 417
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணமேடு முத்திரியூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி அருகே திருமணமேடு முத்திரியூர் மாரியம்மன் கோவில் தெருவைவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் 36 வயதான சுரேஷ்.. லால்குடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தகவல் தொழில்நுட்ப துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அந்தப் பெண்ணை தனிமையில் சந்தித்து நெருங்கி பழகி உள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமாகி உள்ளார். மேலும் வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தார் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.