கூகூர் கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. அவ்வழியே சென்ற பொதுமக்கள் சடலத்தை கண்டதும் லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவத்திற்கு சென்ற லால்குடி போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் பெண் எப்படி இறந்தார், தற்கொலை செய்து கொண்டாரா, எதற்காக இங்கு வந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.