மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி
மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா பயிற்சி நடைப்பெற்றது.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது.
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் தேசிய மாணவர் படை (NCC) இரண்டாவது கவசப்படை அதிகாரி கர்னல் ஹார்ஸ் நாடார் அவர்களின் நடவடிக்கையின் படி இன்று சர்வதேச யோகாதினம் அனுசரிக்கப்பட்டது
இதில் 50 தேசிய படை மாணவர்கள் கலந்துகொண்டு யோக பயிற்சி செய்தனர்.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சி தண்டபாணி,
உதவி தலைமை ஆசிரியர்கள் தங்கமணி,
பாமாஸ்ரீ, பவுல் ஜோசப் வின்சென்ட், உடற்கல்வித்துறை
டேனியல்,விமல் ராஜ்,ஜோ விமல்,
ஓவியத்துறை
சேசு ராஜ்குமார்,விஜய பாஸ்கர்
கலந்துகொண்டனர்.
டேனியல் பயிற்சியை சிறப்பாக நடத்திக்கொடுத்தார். இறுதியாக
தேசிய மாணவர் படை அதிகாரி D எபினேசர் இம்மானுயேல் நன்றியுரை கூறி சர்வதேச யோகாதினம் நிறைவு பெற்றது.