கொள்ளிடம் கதவணை திறப்பு விழா பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் , வருகின்ற 26 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய கதவனையைத் திறந்து வைத்திட வருகை தருவதை முன்னிட்டு, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு , முக்கொம்பு மேலணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் குறித்து இன்று (22.6.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் .மா. பிரதீப் குமார்,வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் .மு அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்.கதிரவன், அ.சௌந்தரபாண்டியன்,செ.ஸ்டாலின்குமார், .ந.தியாகராஜன் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.