மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

0 428
Stalin trichy visit

2012 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்ட திலிருந்து 2022 வரை 10 ஆண்டுகளாக தினமும் காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காகவும்,

10 ஆண்டுகளாக 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளை தேர்வு எழுத டோல்கேட் பகுதியிலுள்ள காஜாமியான் மேனிலைப்பள்ளியிற்கு அழைத்து சென்று, பிறகு செந்தண்ணீர்புரம் பள்ளி வந்து விடுவதற்கும் , அரசு போக்குவரத்து மேலாளரிடம் பேசி அரசு பஸ் (குறைந்த கட்டணத்தில்) ஏற்பாடு செய்து, மாணவ-மாணவிகள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுத உதவிதாகவும்,

செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு எடுத்த ஆர்.சந்திராதேவி, அருணா, ஜெயந்தி, ஜெ.ரீனா, ராணி , ஆசிரியர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டி, வாழ்த்துகள் தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.