சாதிப்பெயரை சொல்லி திட்டியதாக ஆங்கியம் ஊராட்சி தலைவரின் கணவர் கைது

0 713
Stalin trichy visit

ஆங்கியம் ஊராட்சி நூறு நாள் வேலை சம்பந்தமாக ஊராட்சி தலைவர் ஹேமா(38) பொதுமக்களிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அதே ஊரைச் சேர்ந்த கபிலரசன்(45) என்பவருக்கும், ஊராட்சி தலைவர் ஹேமாவிற்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

கபிலரசன் காயமடைந்ததாக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊராட்சி தலைவர் ஹேமாவின் மகன் சந்துரு(26) தன்னை அடித்ததாகவும், தலைவரின் கணவர் பெரியசாமி(40) சாதிப்பெயரை சொல்லி திட்டியதாகவும், கபிலரசன் உப்பிலியபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிந்து பெரியசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.