திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கியது

0 1,634
Stalin trichy visit

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமெடுத்ததை தொடர்ந்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதே வேளையில் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடந்து வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்ட நிலையில், கடந்த 6-ந் தேதி தேசிய மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். முடிவில் ஆகஸ்டு 16-ந் தேதி (அதாவது நேற்று) முதல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நேரடி வகுப்பு கல்லூரிகள் தொடங்கியது. திருச்சி பெரியமிளகு பாறையில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரையிலான மாணவ, மாணவிகள் நேரடியாக கல்லூரிக்கு வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்பிற்கு வரவும், தனிமனித சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிந்து அரசின் கொரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. இதுவரை ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை கவனித்து வந்த மாணவ, மாணவிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் பாடம் தொடர்பான சந்தேகங்களை நேரடியாக கேட்டு விளக்கம் பெறுவதால் தெளிவு கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் அர்ஷியா சில அறிவுரைகளை வழங்கினார்.

இது தொடர்பாக துணை முதல்வர் அர்ஷியா கூறுகையில், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களை கடந்த 13ம் தேதியே வரவழைத்து ஆர்.டி.பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் கொரோனா நெகட்டிவ் என்று வந்த மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர அனுமதிக் கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்த 2 மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 மாணவர்களு டன் இருந்த 10 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சி மருத்துவக்கல்லூரியில் உள்ள 600 மாணவர்களை, தினமும் 150 பேர் என 4 பேட்ஜ்களாக பிரித்து சுழற்சி முறையில் வகுப்பு எடுக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிப்பார்கள்.

எம்.பி.பி.எஸ். படிப்பு என்பது வீட்டில் உட்கார்ந்து ஆன்லைனில் படிக்கும் படிப்பல்ல. ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தாலும் வீடியோவை காண் பித்தாலும் செய்முறை விளக்க பயிற்சி அளித்தால் தான் மாணவர்களால் புரிந்து கொள்ள முடியும். மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பை அளித்து வருகிறோம். லேப்டெக்னீசியன் பிரிவில் முதலாமாண்டு மாணவர்கள் 66 பேர் வந்துள்ளனர் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.