புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் பழங்கால பாக்கு வெட்டி சிறப்பு சொற்பொழிவு

0 271
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம், புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் பழங்கால பாக்கு வெட்டிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நூலகத்தில் நடைபெற்றது.
நூலகர் புகழேந்தி வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் பாக்கு வெட்டி குறித்து பேசுகையில்,
முன்னோர்களின் அற்புதமான கண்டு பிடிப்புகளில் பாக்கு வெட்டி ஒன்றாகும். பாக்கை வெட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட இக்கருவி பல்வேறு வடிவங்களில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. விருந்துகளுக்குச் சென்றால் கண்டிப்பாக வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். பாக்கில் உள்ள குரோமியம் உப்பு திடீரென்று வரும் மயக்கத்தையோ, இரத்தக் கொதிப்பையோ வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

முழுப்பாக்கை வெட்டி வெத்திலையில் வைத்து மடித்து சிறிது சுண்ணாம்பு, சீவல், புகையிலை துண்டும் சேர்த்து மெல்லும் வழக்கம் அன்று
இருந்தது.
பாக்கு வெட்டியின் பயன்பாடு தற்போது குறைந்து விட்டது எனினும் கிராமப்புறங்களில் இன்றும் பயன்படுத்துகிறார்கள்.
அப்படிப்பட்ட பாக்கு வெட்டி ஆண், பெண் வடிவிலும், குதிரை, அன்னப்பறவை, குழந்தையை கொஞ்சம் தாய் என கலைநயத்துடன் பல்வேறு பாக்கு வெட்டிகள் பயன்பாட்டில் இருந்துள்ளது. பாக்கு வெட்டி தற்காப்பிற்கு பயன்படுத்தும் வகையிலும் வடி

Leave A Reply

Your email address will not be published.