M.A.M B-பள்ளி கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்க விழா

0 234
Stalin trichy visit

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம்

M.A.M B-பள்ளி கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்க விழா

6 செப்டம்பர் 2022 @ காலை 10.45 மணி நியூட்டன் ஹால்

டாக்டர். M. ஹேமலதா இயக்குனர்- MAMBS தலைமையில் நடந்தது

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் முன்னிலையில் நடந்தது.

தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார் வாழ்த்துரை : தண்ணீர் , பிளாஸ்டிக் யின் தீமைகள், மரங்களை பற்றி பேசினார்.

சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ எஸ். தாமோதரன் கிராமாலயாவின் நிறுவனர் & CEO
Hygiene Alone Triumphs தூய்மையே வெல்லும் என்ற தலைப்பில் :

கிராமாலயா தொண்டு நிறுவனம், புது டில்லியல் உள்ள மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தினால் முக்கிய வள ஆதார மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் பணி செய்த அனுபவத்தின் காரணமாக, கிராமாலயாவிற்கு தேசிய அளவில் பயிற்சி நிறுவனமாக அனுமதியளிக்கப்பட்டு, தென் மாநிலங்களில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாட்டில் அரசு அலுவலர்களுக்கு ஒரு பயிற்சி நிறுவனமாக இயங்குவதற்கு இந்திய அரசு அங்கீகாரம் செய்துள்ளது. கிராமாலயாவின் ஒரு அங்கமாக விளங்கும் நிவாஸ் என்று அழைக்கப்படும் தேசிய அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார பயிற்சி மையம், ஏற்கெனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் அரசு மற்றும் தொண்டு நிறுவன பார்வையாளர்கள் கற்றுக்கொள்வதற்கும், ஆராய்ச்சிக்கும் மற்றும் பட்டறிவுப் பயணம் மேற்கொள்ளவும் உதவுகிறது. கென்யா, பங்களாதேஷ், நேபாளம், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் சுகாதாரப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக வருகை புரிகின்றனர்.

கிராமாலயாவின் பயிற்சி மையத்தில் குடிநீருக்கான குறித்த தொழில்நுட்பப் பூங்கா, கழிப்பறை தொழில்நுட்பப் பூங்கா ஆகியவை தனித்தனியே உள்ளது. கழிப்பறை தொழில்நுட்பப் பூங்காவில் பல்வேறு வகையான குறைந்த செலவிலான கழிப்பறைகள், உலர்கழிப்பறை, உறிஞ்சுக்குழி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கழிப்பறை மாதிரிகள் உள்ளன மற்றும் வெற்றிக்கதைகள், நல்ல மாற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்.

தண்ணீர் அமைப்பு சார்பில் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம் ” விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.

திருமதி. பாத்திமா பத்தூல் மாலுக், கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா மற்றும் தலைவர், செயலாளர் , உறுப்பினர்கள் , கல்லூரி பேராசிரியர்கள் , மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.