பள்ளி ஆசிரியையிடம் தாலி சங்கிலி பறித்த 2 பேர் கைது

0 505
Stalin trichy visit

திருவெறும்பூரையடுத்த காட்டூர் காந்தி நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்(50). இவர் மணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பஞ்சவர்ணம் அருகில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு வங்கியின் அருகே இருந்த கொய்யாப்பழ கடையில் கொய்யாப்பழம் வாங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரது தாலி செயினை அறுத்து சென்று தப்பியோடினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பஞ்சவர்ணம் சத்தம்போடவே பொதுமக்கள் ஒன்று கூடுவதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். பின்னர் அவர் இதுகுறித்து திருவெரும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் வேங்கூர் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்குரிய இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்த பகதூர்ஷாவின் மகன் பாதுஷா(24) மற்றும் மிலிட்டரி காலனி சுலைமானின் மகன் சிக்கந்தர் பாஷா(25) என்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், கடந்த 7ம் தேதி நடந்த செயின் பறிப்பில் இவர்களுக்கு சம்பந்தம் உள்ளது எனவும், மேலும் இரவு நேரங்களில் திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி மற்றும் கூத்தைப்பார் பேரூராட்சி பாரதிபுரம் ஆகிய இடங்களில் 4 ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. மேலும் இதையடுத்து அவர்களிடம் 7 பவுன் தங்க சங்கிலியை மீட்டதுடன் ஆடுகளையும் உரியவரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.