போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு பறக்க முயன்றவர் கைது

0 477
Stalin trichy visit

திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு தோகா நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது தஞ்சாவூர் மாவட்டம் துறவிக் காடு பகுதியைச் சேர்ந்த ஹைதர் அலி(52) என்பவர் போலியான பெயர் மாற்றம் முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல இருந்ததை அறிந்த இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஹைதர் அலியை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.