திருச்சி பொன்மலை அருகே உள்ள மஞ்சத்திடல் ரயில் நிலையம் பின்புறம் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை செய்த போது அவர் அந்தப் பகுதியில் சில வருடங்களாக சுற்றித் திரிந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது பெயர் எந்த ஊர் என்பது அடையாளம் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.