மொபட் மீது லாரி மோதி நர்ஸ் பலி

0 463
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை தர்ம நாதபுரம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(30). இவரது மனைவி ஆரோக்கிய டயானா (28). இவர் திருச்சி லால்குடி திருவள்ளுவர் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மைய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.

கணவர் முருகேசன் லேத் ஒர்க் செய்து வருகிறார். நிலையில் நேற்று மாலை இவர்களது 5 வயது மகன் சாய் ஸ்ரவணுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் காண்பித்து விட்டு, மீண்டும் லால்குடி நோக்கி சென்றபோது திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே முருகேசன், ஆரோக்கிய டயானா, மகன் சாய ஸ்ரவண் மற்றும் 11 மாத குழந்தையுடன் ஒரு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியதில் ஆரோக்கிய டயானா கீழே விழுந்ததில் லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின் மீது வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய டயானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பொய்யாமணி, பங்களா புதூரைச் சேர்ந்த விஜயகுமார்(42) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.