தார் சாலை அமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, அ;க21 திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒ;ன்றியம், வாழவந்தான் கோட்டையில் தமிழ்நாடு ஊரக சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, வடடார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.