சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முடிதிருத்தும் தொழிலாளர்களிடம் வசூல் வேட்டை

0 928
Stalin trichy visit

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் முடிகாணிக்கை மண்டபத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களிடம் வசூல் வேட்டை – கோவில் முடி மண்டபத்தின் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை பாயுமா?

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் எடுத்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

அம்மனுக்கு புகழ்பெற்ற திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மொட்டை அடித்து வழிபடுகின்றனர் – தமிழக அரசின் உத்தரவின் படி பொது மக்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 160 நாவிதர்கள் ( முடி திருத்தும் பணியாளர்கள் ) இந்த முடி மண்டபத்தில் பணி செய்து வருகின்றனர் – ஆனால் இங்கு பணி செய்யும் நாவிதர்களிடமிருந்து தினசரி ஒரு நபரிடம் 50 ரூபாயும் – ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 100 ரூபாயும் முடி மண்டபத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் நித்தியானந்தம் வசூல் செய்து வருவது தற்போது அம்பலமாகி வருகிறது.

மேலும் வசூல் செய்த பணத்தை கோவில் இணை ஆணையராக பணியாற்றி வரும் கல்யாணிக்கு தெரிந்து தான் நிகழ்வதாக அங்கு பணியாற்றும் நாவிதர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து திருக்கோவில்கள் நலன் சார்ந்தும் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு எவ்வித குறைபாடுகளும் ஏற்படக்கூடாது என்கிற நோக்கில் செயல்பட்டு வரும் நிலையில் இது போன்ற கண்ணுக்கு தெரிந்த ஊழலை கண்டு கொள்ளுமா ? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்

Leave A Reply

Your email address will not be published.