சோளப்பயிரை நாசம் செய்த குரங்குகள்: மனமுடைந்த விவசாயி தற்கொலை

0 257
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தளுதாளப்பட்டியில் சோளப் பயிர் சாகுபடியை குரங்குகள் கடித்து நாசம் ஆக்கியதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார்.
மண்ணச்சநல்லூர் அருகே  தெற்கு தளுதாளப்பட்டியைச் சேர்ந்தவர் 40 வயதான பாலு. இவர் அப்குதியியில் ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். இந்த சோளம் சாகுபடி பயிர்களை அப்பகுதிகளில் உள்ள குரங்குகள் வந்து கடித்து நாசமாக்கியதாக கூறப்படுகிறது இதனால் பாதிப்புக்கு உள்ளான விவசாயி மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்தவர் மது அருந்தி உள்ளார். அப்போது கடந்த 27 ந்தேதி் சோளத்திற்கு அடிக்க  வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தார்.அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணசநல்லூர் அரசு மருத்துவமனைக்கு் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.