பைக் மீது லாரி மோதி விபத்து : பெண் பலி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூர் அடுத்த எம் ஆர் பாளையத்தில் மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மணச்சநல்லூர் அருகே ஸ்ரீதேவிமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவருடைய மனைவி 55 வயதான வெண்ணிலா. இவர்கள் தனது மோட்டார் பைக்கில் எம் ஆர் பாளையம் திருப்பட்டூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லால்குடி அருகே ஊட்டத்துரைச் சேர்ந்த 25 வயதான ரஞ்சித் குமார் டிப்பர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.இதில் முன்னாள் சென்ற பைக் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் மோட்டார் பைக் தடுமாறி கீழே விழுந்தது. இதில் பின்னால் அமர்திருந்த வெண்ணிலா படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்