முசிறி வட்டாரத்தில் பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகள் பட்டறிவு பயணம்

0 250
Stalin trichy visit

முசிறி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற முறையில் விவசாயிகள் பட்டறிவு பயணத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நளினி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு ஒரு நாள் பயணமாக 50 விவசாயிகளை அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயிறு வினையியல் பேராசிரியர் டாக்டர் நித்திலா பயிர் வகை பயிர்களான உளுந்து தட்டப்பயிறு பாசிப்பயிறு மற்றும் துவரை பயிறுகளில் விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினார் மேலும் அறிவியல் நிலையத்தில் பயிர் வகை பயிர்களான முதல் நிலை செயல் விளக்க திடல் அமைந்துள்ள புதிய ரகங்களான உளுந்து பயிரில் வம்பன் 9 வம்பன் 10 வம்பன் 11 ரகங்களும் துவரைப் பெயரில் வம்பன் -3 இரகமும் தட்டைப்பயிரில் வம்பன் -3 ரகமும் பாசிப்பயிரில் வம்பன்-4 முதலிய ரகங்களின் தனித்துவம் ,நோய் எதிர்ப்பு திறன் குறித்தும், விவசாயிகளை வயலுக்கே அழைத்துச் சென்று, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும் பயிறு வகை பயிர்களுக்கு பூ பூக்கும் தருணத்தில் பயிர் ஒண்டர் வளர்ச்சி ஊக்கியினை, ஏக்கருக்கு இரண்டு கிலோ விதம் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் எனவும், பூக்கள் உதிராமல் காய் பிடிப்பு திறன் அதிகரிக்கும் என ஆலோசனையும் வழங்கினார். இந்த பட்டறிவு பயணத்திற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகந்தா மற்றும் உதவி தொழில் மேலாளர் பிரசாந்த் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.