முசிறியில் மது விற்ற இருவர் கைது

0 308
Stalin trichy visit

முசிறி காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் பிரியங்கா போலீசாருடன் திருட்டுதனமாக மது விற்பதை தடுக்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது சொரியம்பட்டி மேடு பகுதியில் தனது வீட்டின் பின்புறம் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (72 ),என்பவரும் தாபேட்டை ரவுண்டானா பகுதியில் வேளக்காநத்தம் பகுதியை சேர்ந்த மருதமுத்து (32) என்பவரும் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக அதிக விலைக்கு விற்பதை கண்டுபிடித்தார். மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை, பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.