“கற்றல் இனிது, வாங்க கற்கலாம்” முன்னெடுப்பு தொடக்கம்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பள்ளிக்கல்வித்துறை, யங் இந்தியன்ஸ் அமைப்புடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலை வலுப்படுத்தும் விதமாக ‘கற்றல் இனிது, வாங்க கற்கலாம்’ என்ற முன்னெடுப்பினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், யங் இந்தியன்ஸ் தலைவர் பிரதீப் மற்றும் கல்வித்துறை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.