சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

0 448
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் 1100 ஹெக்டருக்கும் மேல் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் சாகுபடியின் போது ஊட்டச்சத்து குறைபாடு, பூச்சி மற்றும் நோய் பிரச்சணைகளால் 20-35 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே வேளாண் பெருமக்கள் எழுமிச்சை சாகுபடியில் முறையான தொழில்நுட்பத்தை அறிந்து சாகுபடியை சிறப்பாக செய்திட வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, லயன்ஸ் அறக்கட்டளை மற்றும் மித்ரா பவுண்டேசன் இணைந்து எலுமிச்சை சாகுபடி எனும் தலைப்பில் இணையவழி தொழில்நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது.

இப்பயிற்சியானது தமிழ்நாடு வேளண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் ஜவஹர்லால் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம், சங்கரன் கோவில் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆர்.ரிச்சர்டு கென்னடி எழுமிச்சை ரகங்கள் மற்றும் சாகுபடி குறித்த பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். பிறகு உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் சாகுபடி முறைகள் பற்றி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நா. தமிழ்ச்செல்வன் எடுத்துரைத்தார். மேலும் வேளண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.கே.எம் 1 எலுமிச்சை ரகத்தின் சிறப்பு பற்றி உதவிப்பேராசிரியர் அலெக்ஸ் ஆல்பர்ட் எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து மண்ணியல் துறை உதவிப்பேராசிரியர் தனுஷ்கோடி எலுமிச்சை சாகுபடியில் இட வேண்டிய உரங்கள் மற்றும் நுண்ணூட்டம் இடுவது குறித்தும், ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிற்க ஐ.ஐ.எச்.ஆர் சிட்ரஸ் ஸ்பெசல் தெளிக்கும் முறைகள் பற்றியும் விளக்கமளித்தார். எலுமிச்சையை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஷீபா ஜாஸ்மின், பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுனர் எடுத்துரைத்தார். இந்நிகழச்சிக்கு திருச்சி, தூத்துக்குடி, வேலூர், கரூர் மாவட்டத்திலிருந்து 100 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இறுதியாக பயனாளிகளுடனான கலந்துரையாடலில் எலுமிச்சை சாகுபடி குறித்த பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.