திருச்சியில் 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி!

0 581
Stalin trichy visit

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை நான்கு கோட்டங்களிலும் தொடர்ந்து தடுப்பூசி முகாமானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது திருச்சியில் உள்ள உறையூர், தெப்பகுளம், சுப்பிரமணியபுரம், காட்டூர் ஆகிய 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிட்ஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரு தடுப்பூசிகளும் 27ம் தேதி முதல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.