அரசு பேருந்து ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

0 453
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூரில் அரசு பேருந்து ஓட்டுநர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூர் மாசி நகரை சேர்ந்தவர் 50 வயதான ராஜா. இவர் பெரம்பலூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ராஜா கடந்த சில நாட்களாக உடல்நிலையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.