வைகுந்த ஏகாதசி திருவிழா பகல் பத்து 5ஆம் திருநாள்
வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவத்தில் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் திரு மார்பில் விமான பதக்கதுடன் எழுந்தருளிய நம்பெருமாள் – திருவரங்கனின் எழில்மிகு அழகை காண குவிந்த பக்தர்கள்…
காவிரியும் கொள்ளிடமும் கூடும் இடம் தன்னில் வானளாவில் கோவில் கொண்ட அரங்கனே என்கிற பாடலுக்கு ஏற்ப அகண்ட பரந்த ஆலயமும் – உலகில் வேறு எங்கும் இல்லாத அளவில் நிமிர்ந்து கம்பீரமாக காட்சி தரும் ராஜ கோபுரமும் கொண்ட ஸ்ரீரங்கத்தில் இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா கடந்த வியாழக்கிழமை அன்று துவங்கியது.
பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பகல் பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பர் இன்று பாண்டியன் கொண்டு அலங்காரத்தில் திரு மார்பில் விமான பதக்கம் ரத்தினபையகஸ்தம் முத்துச்சரம் மற்றும் அடுக்கு பதக்கதுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் புடை சூழ அர்ஜுன மண்டபம் அடைந்தார்.
முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டபோது – ரங்க ராஜா – ரங்க பிரபு – கோவிந்தா என்கிற பக்தர்கள் பக்தி பரவசத்தில் முழக்கம் இட ராஜநடை போட்டு ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்த ரங்கநாதர் பின்னர் அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார்.