ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து 7ம் நாள் திருவிழா

0 384
Stalin trichy visit

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 22 ஆம் தேதி திருநெடு தாண்டகத்துடன் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக பகல் பத்து உற்சவத்தின் 7 ம்
நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து
கல் இழைத்த நேர் கிரீடம்,
மகர கர்ண பத்ரம், மகரி,  பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல், மிக அரிதான இந்திரக்கல் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், ரத்தின அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு கச்சத்தின் மேல் தர்பார் அங்கி அணிந்து, நெல்லிக்காய் பொட்டு மாலை,
இரட்டை வட பெரிய முத்து சரம் சாற்றி, பின் சேவையாக – சந்திரகலை பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல்
ஆகிய திருவாபரணங்கள் அணிந்து ஆழ்வார்கள், ஆச்சாரியார்களுடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.