பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள உத்தமர் கோயில் மேம்பாலத்தில் மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் சேலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் 41 வயதான அருண்.இவர் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தனது பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உத்தமர் கோயில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோநு எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.