சமயபுரத்தில் டாஸ்மார்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

0 420
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மார்க் கடையில் கடனுக்கு மதுபாட்டில்கள் தராததால் ஆத்திரமடைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் டாஸ்மார்க் ஊழியரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்.

சமயபுரம் நால்ரோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 10353 என்ற மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் வந்து கடனுக்கு மது பாட்டில்கள் டாஸ்மார்க் விற்பனையாளர் பாலகிருஷ்ணனிடம் கேட்டுள்ளனர். டாஸ்மார்க் விற்பனையாளர் பாலகிருஷ்ணன் கடன் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் டாஸ்மார்க் விற்பனையாளரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை பிடிக்க கடையில் இருந்து வெளிவந்த போது மறைத்து வைத்திருந்த அறிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து காயம்பட்ட டாஸ்மார்க் ஊழியர் பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பியோடிய நபர்கள் குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சமயபுரம் ஒத்தக்கடையை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் என தகவல்கள் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.