திருப்பைஞ்சீலியில் மோட்டார் பைக் மாயம்-மர்ம நபர்கள் கைவரிசை..

0 280
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி கடைவீதியில் உள்ள மைசூர் காபி கடை அருகே நிறுத்தி இருந்த மோட்டார் பைக் திடீரென மாயமானது. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.

மண்ணச்சநல்லூர் அருகே சுனைபுகநல்லூரை சேர்ந்தவர் 33 வயதான சிரஞ்சீவி.இவர் நேற்று திருப்பைஞ்சீலி கடைவீதியில் உள்ள மைசூர் காபி கடை அருகே ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைவீதி பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.