சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூரில் உள்ள லால்குடி செங்கரையூர் சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா கொறைகுலி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் 20 வயதான மணிகண்டன்.இவர் அரியூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.நேற்று மாலை வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மோட்டார் பைக்கில் லால்குடி செங்கரையூர் சங்கர் வீட்டு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சரக்கு வாகனத்தை லால்குடி அருகே திருமணம்மேடு ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மர் மகன் 28 வது சரவணன் எதிரே ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அரியூர் பகுதியில் மோட்டார் பைக் மீது சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து ஏற்பட்டவுடன் சரக்கு வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து லால்குடி போலீசார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.