நம்பர் 1 டோல்கேட்டில் அதிக பாரம் வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி விபத்து.

0 258
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர்1 டோல்கேட்டில் அதிக பாரம் வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி விபத்து.வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தொடரும் விபத்து.

தேவகோட்டையில் இருந்து வைகோலை ஏற்றிக்கொண்டு திருச்சி வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த டிரைவர் குமரவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் தேவகோட்டையில் இருந்து சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதிக்கு காலை 7.30 மணிக்கு மினி லாரி வந்தது, அதிக பாரம் ஏற்றி வந்ததால் மினி லாரியின் பேரிங் உடைந்து கவிழ்ந்தது. இதில் மினி லாரியின் ஓட்டுனர் குமரவேல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் தொழிலாளர்களைக் கொண்டு மினிலாரியில் உள்ள வைக்கோல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கத்தை விட அதிகமாக பாரம் ஏற்றி வந்த மினி லாரியை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் விடுவதால் தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகிறது என பொதுமக்களும் சமூக அலுவலரும் கூறுகின்றனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா அருகே மர துண்டுகளை அதிகாரம் ஏற்றுக் கொண்ட லாரி சாய்ந்து விபத்துக்குள்ளானது
என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.