கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்
திருச்சி, ஜன.28 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்-கு கால்நடை மருத்துவர் ஆனந்த் தலைமை வகித்தார். முகாமில் மாடுகளுக்கு அம்மை நோய்களுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கான மலட்டுத் தன்மை நீக்கம், சினை ஊசி, கன்றுகளுக்குத் தேவையான சத்துமாவு போன்றவை வழங்கினார். இம்முகாமில் எம்.ஐ.டி.வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் பங்கேற்று முகாமினை ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.