சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைபூசத் திருவிழா முதல் நாள்
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் தைபூசத் திருவிழா ஜனவரி 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான இன்று அம்மன் மரசிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
தைப்பூச விழாவையொட்டி கோயில் உள் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்திற்கு சிவாச்சாரியர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய தைப்பூசக் கொடியினை ஏற்றி விழா தொடங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து 11 நாட்கள் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து திருவீதி உலா வருகிறார்

இந்நிலையில் தைப்பூச விழாவின் முதல் நாளான இன்று வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாதரனை நடைபெற்றது. பின்னர் அம்மன் மரசிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் மற்றும் தேரோடும் வீதிகளில் திருவீதி உ.லா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தலைமையில் மண்டகப்படி ஆறுமுக உடையார் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.