துவரங்குறிச்சியில் 10 நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

0 347
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் பெரியசாமி என்பவர் தோட்டத்தில் களத்து வீடு உள்ளது. மேலும் கால்நடைகளும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று உலா வந்த நிலையில் பின்னர் வரப்பில் படுத்துக் கொண்டது.

நள்ளிரவில் இதைப்பார்த்த பெரியசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.