திருச்சி மாநகர காவல்துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற புதிய மோப்ப நாய் சேர்ப்பு

0 313
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல்துறைக்கு சிறப்பு பயிற்சி பெற்ற புதிய மோப்ப நாய் சேர்ப்பு.

திருச்சி மாநகர காவல் ஆணையராக M.சத்தியப்பிரியா இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிமாணவர்களின்எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும், திருச்சி மாநகரில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கவும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Labrador Retriever என்ற இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு அதற்கு BOND என்று பெயரிடப்பட்டது.

மேற்படி மோப்ப நாய்க்கு கடந்த 08.08.2022-ந்தேதி முதல் 03.02.2023 வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் 06 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டும், இன்று (06.02.2023)-ந்தேதி முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா  முன்னிலையில் திருச்சி மாநகர மோப்பநாய் படை பிரிவில் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.