குமுளூர் அரசு கலை கல்லூரியுடன் எம்.ஏ.எம் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் எம் ஏ எம் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் எம் ஏ எம் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் வணிக நிர்வாகவியல் துறையில் கல்லூரியின் முதல்வர் கி மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது.
துறைத் தலைவர் சுலைமான் முன்னிலை வகித்தார்.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு எம் ஏ எம் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் ஜீவரேகா, அகிலா மற்றும் கிருத்திகா ஆகியோர் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் ஆக வருவது குறித்தும் அதன் தேவைகள், சிறப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் கணினி துறை தலைவர் அசோக் குமார், நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் ஜெயப்பிரகாஷ், வேம்பு வணிகவியல் துறைத்தலைவர் எழில் பாரதி, தமிழ்த்துறை தலைவர் ராஜா ,
NSS ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்மாறன், ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் ஹேமலதா வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக உதவி பேராசிரியை தீபா தேவி நன்றி கூறினார்