மயங்கி விழுந்த தொழிலாளி திடீர் சாவு
திருச்சி அரியமங்கலம் காந்திமார்க்கெட் நேருஜிநகரை சேர்ந்தவர் குமரன்(35). இவர் காந்தி மார்க்கெட்டில் உள்ள வெற்றிலைபாக்கு குடோனில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் அங்கு சுமை தூக்கிக்கொண்டிருந்த போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.