திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் சாலையோரத்தில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்?, எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இறந்தவர் முன் தலையில் வழுக்கையும், ஊதா கலர் அரைக்கை சட்டை, காவி வேஷ்டி, காவி துண்டு அணிந்து இருந்துள்ளார். அவரது இடது முழங்காலில் காயத்தழும்பும், இடது தொடையின் உள் புறம் புல்லி மச்சமும் உள்ளதாக போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர்.