வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை

0 409
Stalin trichy visit

திருச்சி இனாம்குளத்தூர் அருகே உள்ள சின்னாளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஐஸ்வர்யா(23). இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா கடந்த 23ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா இனாம்குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இனாம்குளத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்யதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.