திருச்சியில் போக்குவரத்து விதிமீறல்கள் செய்த 2000 நபர்கள் மீது ரூ.6 இலட்சம் அபராதம்!

0 425
Stalin trichy visit

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அரசு விதித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய் தொற்று மெதுவாக அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதிகளவில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் அனைத்து மத வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.

இக்கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு 23.08.2021 முதல் 06.09.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது. திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறிபவர்களை தடுக்க சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று (29.08.2021) சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பாக மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் அதிகம்கூடும் இடமான அண்ணாசிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், மாம்பழச்சாலை சந்திப்பு, மேலப்புதூர் சந்திப்பு, தலைமை தபால்நிலையம் மற்றும் காந்தி மார்க்கெட் சந்திப்பு ஆகிய இடங்களில் சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று ஒருநாள் அரசின் தடை உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 1200-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 30 நபர்கள், சாலை விதிகளை மீறி தலைக்கவசம் அணியாமலும், சீட்பெல்ட் அணியாமலும், மற்ற விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு 2000 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூபாய் ஆறு லட்சம் (ரூ.6,00,000/-) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தற்போதிலிருந்து பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.