புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் வாகன வசூல் ஏலத்தை நிறுத்த கோரிக்கை
புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் வாகன வசூல் ஏலத்தை நிறுத்த கோரி புளியஞ்சோலை சுற்றுலா வளர்ச்சி குழு மற்றும் திருச்சி மாவட்ட சாலை பயனீட்டாளர் நல அமைப்பு சார்பாக துறையூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தராஜன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் அத்தியாவசிய அடிப் படைவசதிகள் (குப்பை தொட்டிகள், சுகாதார வளாகம், மின்விளக்குகள்) போ துமான அளவில் இல்லை மேலும் “இரண்டு /நான்கு
சக்கர வாகனங் களுக்கு போதுமான வாகனநிறுத்தமும் இல்லை “.
தற்பொழுது புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் “நீர்மின் உற்பத்தி நிலையம்” கட்டுமான பணிகள் நடைபெற்று
வருகின்றது. இங்கு நடைபெறும் கட்டுமான பணி களுக்கு கனரக வாகனங்கள் அதிகஅளவில் வந்து செ ல்கின்றன.
மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணி களுக்கு போதுமான வாகன நிறுத்தம் இல்லாததால் இங்குள்ள சாலை களில் சுற்றுலா பயணிகள் அப்படியே வாகனங் களை நிறுத்தி விட்டு செல்கின்றனர், இதனால் புளியஞ்சோலை சாலை வழியாக தங்கநகர் மற்றும் பி.மேட்டூர் செல்லும் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர் .
புளியஞ்சோலை நீர் மின் உற்பத்தி நிலைய கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்பு
மற்றும் இரண்டு /நான்கு சக்கர வாகனங்களுக்கு முறையான வாகன நிறுத்தம் போதுமான
அளவில் அமைத்த பின்பு புளியஞ்சோலை வாகன வரி வசூல் ஏல குத்தகையை நடத்து மாறு பச்சப்பெருமா ள்பட்டி பஞ்சாயத்து கிராம நிர்வாகம் மற்றும் உப்புலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களையும் திருச்சி மாவட்ட
சாலை பயனீட்டாளர் நல குழு, மற்றும் புளியஞ் சோலை சுற்றுலா மையம் வளர்ச்சி குழு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.