தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறை
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறை – வேளாண் மாணவர் செயல் விளக்கம்.
கிராமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன் ம.பிரேம்குமார் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறையை பற்றி விளக்கம் அளித்தார்.அவர் கூறியதாவது,

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், தென்னையை தாக்கி அதிக சேதமுண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும்.இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட ஓலைகளிலிருந்து படியும். அதன்மேல், கேப்னோடியம் என்ற கரும்பூசணம் படர்கிறது. இதனால், ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. இப்பூச்சிகள் தென்னை மட்டுமில்லாமல், வாழை, பாக்கு, சப்போட்டா, கரும்பு ஆகிய பயிர்களையும் தாக்குகின்றன.
செய்முறை :
வெந்நீரில் மைதா மாவை சேர்க்க வேண்டும் , அதில் இருந்து நமக்கு மைதா பசை கிடைக்கும். 1 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் மைதா பசையை தென்னை மரத்தில் தெளிப்பான் மூலம் தெளிப்பதால் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை நான் கட்டுப்படுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு ம.பிரேம்குமார், இறுதியாண்டுவேளாண் மாணவன்.
மின்னஞ்சல் : premk786931@gmail.com முனைவர் பா.குணா,இணைப்பேராசிரியர், வேளாண் விரிவாக்க துறை, நாளந்தா
வேளாண்மை கல்லூரி, எம்.ஆர்.பாளையம்,
திருச்சி
மின்னஞ்சல் : baluguna8789@gmail.comஇவர்களை தொடர்ப்புகொள்ளவும்.