சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

0 277
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்த போலீசார் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

சமயபுரம் அருகே தனியார் கல்லூரி பின்புறம் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபடுவதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட இனாம் சமயபுரத்தைச் சேர்ந்த வடிவேல், மாகாளிகுடியைச் சேர்ந்த ராகவன், திருச்சி தெற்கு காட்டூரை சேர்ந்த சிவகுமார், சமயபுரத்தைச் சேர்ந்த கணேசன் பெரியண்ணன் ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அனைவரையும் காவல் நிலைய மிணையில் விடுவித்தனர்.மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சீட்டு கட்டு பண்டல் ரூ 300 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.